SHARE

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தொடர்ச்சியாய் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இறந்ததினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையியடுத்து கண்டி நிர்வாக மட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்றய தினம் இரு கடைகள் எரிக்கப்பட்டு கலவரங்கள் நடைபெற்ற அதேவேளை இன்று அவ் இளைஞனின் இறுதி ஊர்வலமும் நடைபெறவுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கே  இவ் உத்தரவு போடப்பட்டுள்ளது.

தெல்தெனிய திகன கலவரத்துக்கான காரணம் வெளியானது

தெல்தெனிய திகன நிகழ்வுகளின் பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இது வரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி மரணமடைந்த அந்த சிங்கள இளைஞன் ஒரு லொரி சாரதி.

சம்பவ தினம் நள்ளிரவு வேளை அம்பாறை நோக்கி செல்வதற்கு லொரியை எடுத்த போது, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பக்கக் கண்ணாடியில் சிறிது மோதி அது சேதமடைந்து விட்டதாகவும், அம்முச்சக்கர வண்டியில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்ணாடியை உடனடியாக வாங்கித் தருமாறு கேட்டு அடம்பிடித்ததாகவும்,
“இந்த நள்ளிரவில் எங்கும் போய் வாங்க முடியாது. நான் இப்போது அம்பாறை செல்ல வேண்டியிருக்கிறது. எனவே இப்பணத்தை வைத்து நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்” என 1000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு அவ்விளைஞன் அவ்விடத்திலிருந்து லொரியுடன் நகர்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இவர்கள் லொரியை பின்தொடர்ந்து சென்று பெற்றோல் நிரப்பும் நிலையமொன்றில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் குறித்த சாரதியான இளைஞனை தாக்கியதாகவும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தின் பின் நேற்று முன்தினம்(3) அவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்குமாறு சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதாலும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email