SHARE

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட மிதிவெடிகளைப் பார்த்து வியந்த ஐ.நா.வின் சிறப்பு துவர் இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசைன் அவைகள் தொடர்பிலான விளக்கங்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கண்ணி வெடிகளை தடைசெய்யும் பிரகடணத்தின் ஐ.நா.சிறப்பு தூதுவர்
இளவரசர் ஹுசைன், நேற்றயதினம் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன் பலதரப்பினருடன் சந்திப்புக்களையும் மேற்கொண்டார்.

இதன்போது கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெற்றுவரும் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளுக்கு நேரில் சென்ற ஹுசைன் அங்கு மீட்கப்பட்டதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிபொருட்களை பார்வையிட்டார்.

இதில் புலிகளால் தயாரிக்கப்பட்ட மிதிவெடிகள் என காட்சிப்படுத்தப்பட்டவற்றை பார்த்து பியந்த இளவரசர் ஹுசைன், அவைகள் தொர்பில் அருகில் நின்றிருந்த அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் இராணுவ அதிகாரிகள் கண்ணிவெடி அகற்றும் பணியாளர் ஆகியியோரிடம் விளக்கங்களை கேட்டறிந்துகொண்டார்.

Print Friendly, PDF & Email