SHARE

இலங்கையில் தற்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிர்ப்த்தி வெளியிட்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன், அங்கு பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில் சர்வதேச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து நாடளாவரீதியில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்துள்ளமை குறித்து நான் மிகவும் அதிர்ப்தி அடைந்துள்ளேன்.

இலங்கை அரசு நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரத்தமுள்ள முன்னேற்றங்கள் இலங்கையில் இல்லாமை குறித்து நான் கவலையடைகிறேன். பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியின் முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமானது.

இதில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில் சர்வதேச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கவுள்ளேன். இது தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முழுமையான விளக்கம் அளிக்கவுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email