SHARE

பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் என அவருக்கு எதிராக பிரித்தானிய பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர்க்குற்றவாளியான பிரியங்க பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் விவகாரத்தினையடுத்து பிரித்தானிய நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் அவருக்கெதிரான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதேவேளை மறுபக்கத்தில் சமகாலவேளையில் பிரித்தானிய இராஜதந்திரகளுடனும் இலங்கை அரசுக்கு ஒத்துப்பாடும் பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற தமிழர் தரப்பின் சில அமைப்புக்களுடனும் காய்நகர்த்தல்களை மேற்கொண்ட இலங்கை அரசு அவரை மெல்ல இலங்கைக்கு அழைத்துள்ளது.

எனினும் கொலை மிரட்டல் அதிகாரியின் விவகாரம் விஸ்பரூபம் எடுத்தவண்ணமே உள்ளன. அவர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் பிரித்தானியாவுக்கு மீள அழைக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்படவேண்டும் என்று அவரால் அச்சுறுத்தலுக்குள்ளான இளைஞரகள், தமிழர் தரப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்களிடமிருந்தும் பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து ‘நமது ஈழநாடு‘ இணையத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் குறித்த காட்சியை தனது கமராவில் பதிவு செய்தவரான சத்திய மூர்த்தி சபேஷ்ராஜ் இராணுவ அதிகாரிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தவர்களில் கிறிஸ்ரிராஜ் பொன்ராஜா, குமரன் சிவதாஸ், வி.மோகனரூபன் ஆகியோர் அளித்த நேர்காணலில் ‘கொலை அச்சுறுத்தல் விடுத்த தூதரக அதிகாரி எங்கிருந்தாலும் பிரித்தானிய சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட வேண்டும். அதே வேளை போர்க்குற்றவாளியான அவரை இலங்கை அரசு பாதுகாக்கவே முயற்சி எடுத்துவருகின்றது’ என தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email