SHARE

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் எதிர்வரும் 26ம் திகதி சமர்பிக்கப்படவுள்ள அறிக்கையில் வடமாகாணசபையின் தீர்மானம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாணசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நேரில் வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே இதனை அவர் கூறியுள்ளார்.

மேலும்,இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்திற்குள் நம்பிக்கை தரும் வகையில் இலங்கை அரசு ஒன்றையுமே செய்திருக்கவில்லை. இந்நிலையில் அரசாங்கத்தை சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறுகோரி வடமாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் ஒரு பிரதியே தற்போது ஆணையளருக்கு நேரில் வழங்கப்பட்டுள்ளது என சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email