SHARE

ஜப்பானில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் ஞானசார தேரர் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஞானசார தேரரும் ஜனாதிபதியுடன் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டாரா? என ஜனாதிபதி செயலகத்திடம் கேட்ட கேள்விக்கும் ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இதேவேளை ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்லவில்லை இலங்கையில் தான் தங்கியிருக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம், ஜப்பானில் உள்ள இலங்கையர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக அங்குள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளித்திருந்தார். இதன் போது அங்குள்ள இலங்கையர்களும் அதிர்ச்சிக்குள்ளாக்கு வகையில் ஞானசார தேரரும் கலந்து கொண்டுள்ளார். ஜனாதிபதி உரையாற்றிக்கொண்டிருக்கும் போது முன்வரிசையில் ஞானசார தேரர் அமர்ந்திருக்கின்றார். இதனை அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதோடு இது தொடர்பாக தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக ஞானசார தேரர் செயற்பட்டார் என பகிரங்கமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டு வருகின்றன. கண்டி இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட மறுநாள் ஜனாதிபதியை மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்திருந்த ஞானசார தேரர்.

இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் வெளியாகியாகியுள்ளான. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம் செய்த விடயத்தை விட, ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரரை போன்ற ஒருவர் அருகில் இருப்பது தொடர்பாக தான் தற்போது இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Print Friendly, PDF & Email