SHARE
மனித உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆவணம் நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் என  பிரதிவாதிகள் சார்பில்  முன்னிலையன பிரதி சொலிஸ்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர மன்றில் தெரிவித்தார்.
நாவற்குழி இராணுவத்தினால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல். நீதிமன்றில் நடைபெற்றது.
அதன் போது ,  பிரதிவாதிகள் சார்பில்  முன்னிலையன பிரதி சொலிஸ்டர் ஜெனரல் செய்த்திய குணசேகர குறித்த மனு தொடர்பில் இணைக்கப்பட்டு உள்ள ஆவணங்களில் ம – 07 என குறிப்பிடப்பட்டு உள்ள ஆவணம் மனித உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆவணம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த ஆவணத்தில் சில இடங்களில் எழுத்தப்பட்டு சில இடங்களில் இடைவெளி விடப்பட்டு உள்ளது. அந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டு உள்ளது. அதனை பார்க்கும் போது ஏற்கனவே நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் போன்றே உள்ளது  என தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email