SHARE

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கம், “சிறந்த சர்வதேச இளைஞன்” என்ற விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

இந்த விருதானது புதுடில்லியில் நடைபெறவுள்ள ஒரு பத்திரிக்கை விழாவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(more)

இந்நிகழ்விற்காக டெல்லிக்கு வரும் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

அதேவேளை, போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் போர்க்குற்றவாளியான மகிந்தவின் மகனான நாமலுக்கு இந்திய அரசாங்கம் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தன: கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more)

பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன.  நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை.

இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email