SHARE

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)

மக்களின் நலன் கருதி அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து எதிர்வரும் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், சீ.வி.விக்னேஸ்வரன் கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் நிற்கலாம் என கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான தனது வாரமொரு கேள்வி பதிலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆதன ஆரம்பகாலத்தில் அதனை உருவாக்க பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. வடகிழக்கு, தாயகம், இறைமை சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கூறுகளை ஜந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும்.

அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாணசபை தேர்தலில் நாம் மக்களிடம் வாக்கு கேட்டோம் மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்று தந்து என்னையும் முதலமைச்சர் ஆக்கினர்.

ஆனால் அதே கொள்கையுடன் தமிழத்தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கிறதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஓரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email