SHARE

தென்னிந்திய கவிஞரும் பாடலாசிரியரும் பிக்பாஸ் பிரபலமுமான கவிஞர் சினேகனை யாழ்ப்பணத்திற்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக சினேகன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

யாழில் படமாக்கப்பட்ட ஒரு முழு நீள திரைப்பட வெளியிட்டுக்கு என தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவ்வாறு அழைக்கப்பட்ட தம்மை வைத்து பல இலட்ச ரூபாய் பணம் மோசடி செய்து உள்ளதாக குறித்த திரைப்பட குழு, அண்மையில் யாழில் தனது கலையகத்தை திறந்த தொலைகாட்சி நிறுவனம் , மற்றும் யாழில்.உள்ள பிரபல ஹோட்டல் ஆகியவற்றின் மீது சினேகன் குற்ற சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அது தொடர்பிலான அவரது உரையாடலின் குறித்த ஒலிப்பதிவில் மேலும் உள்ளதாவது,
எல்லாத்திரும் காரணம் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தான் என தெரியவந்துள்ளது. ஒன்று மட்டும் உண்மை அந்த தொலைக்காட்சி நிறுவனம், ஹோட்டல்,  திரைப்பட குழு என எல்லோரும் சேர்ந்து எம்மை ஏமாற்றி உள்ளீர்கள். ஒரு மணி நேரத்தில் நல்ல பதில் கிடைக்கணும் இல்லை என்றால் இதனை பிரச்சனையாக்கி தமிழ் நாட்டில் இறங்கியவுடன் ஊடகங்களுக்கு தெரிவிப்பேன். தொலைக்காட்சி நிறுவனம் எங்களை எடுத்த நேர்காணலை ஒளிபரப்பு செய்ய கூடாது.
எங்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அந்த ஹோட்டல் காரரிடம் நிறைய பணம் வாங்கி உள்ளனர். நீங்கள் எப்படி எங்களை வைத்து ஒப்பந்தம் இன்றி காசு வாங்க முடியும்.  மூவருமாக சேர்ந்து எப்படி எங்களை விற்க முடியும் இதற்கு மூன்று பேரும் பதில் சொல்ல வேண்டும். இல்லை என்றால் இந்தியாவில் வழக்கு தொடர்ந்து இந்திய காசு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு கோருவேன் என கவிஞர் சினேகன் அதில் தெரிவித்துள்ளார்.
Print Friendly, PDF & Email