SHARE
வவுனியா நகர சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவின் பின்னர் வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி சென்று ஆதரவாக வாக்களிக்கச் செய்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குற்றஞ்சாட்டியதால் சபைக்கு வெளியில் குழப்ப நிலை உருவானது.
வவுனியா நகரசபைக்கு தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு ​நேற்று (16) நடைபெற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இக்குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் அக்குற்றச்சாட்டை முழுமையாக மறுத்ததுடன் அப் பெண் வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்தார்.
அதேவேளை, என்னை யாரும் கடத்த வில்லை என்னை வற்புறுத்தவுமில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்கியதன் காரணமாக நான் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தேன் என குறித்த பெண் வேட்பாளர் தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email