SHARE

மாபெரும் இன இழப்பின் 9 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆயிரக்கணக்கான மக்களின் பிரசன்னத்தோடு கொதுக்கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

வடக்கு கிழக்கு உட்டபட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூட காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் பொது ஈகைச்சுடருக்கான் தீபத்தினை இறுபோரில் உறவை இழந்த சகோதரி ஒருவருக்கு வழங்க அவர் பொதுச்சுடரை ஏற்றினார்.

அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட சுடர்களில் அவர்கள் தமது உறவுகளுக்கான தீபங்களை ஏற்றறினர்.

அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இம்முறை நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கடந்த இறுதி 4 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் பெருமளவிலான மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்காலில் படையெடுத்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கண்முன்னே தமது உறவுகளை பறிகொடுத்தோர் இன்று அவர்களை நினைத்து முள்ளிவாய்கால் மண்ணில் புரண்டு அழும் காட்சிகள் அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது. ஏங்கு திரும்மினாலு ம் அழுகுரல்களும் ஓலங்களுமாக பெரும் சோக மேகம் சூழ்ந்து இன்று முள்ளிவாய்க்கால் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை கடந்த ஆண்டுகளில் இல்லாதவாறு சுட்டெரிக்கும் வெயிலும் இன்று முள்ளிவாய்க்காலில் தனது கருமேகத்தை படரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email