SHARE
மின்சாரவேலியை பயன்படுத்தி வடக்கின் அரியவகை காட்டு யானையை கொன்ற குற்றச்சாட்டுக்குள்ளான  முல்லைத்தீவு, உடையார்கட்டு இராணுவ கட்டளை அதிகாரிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் படையினரின் மின்சார வேலியில் சிக்குண்ட காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது.
இப்பகுதியிலில் 68 ஆவது படைப்பிரிவின் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக போட்டிருந்த மின்சார வேலியிலேயே குறித்த யானை சிக்குண்டு இறந்துள்ளது.
இறந்த யானையின் உடலில் பரிசோதனை மேற்கொண்ட வடபிராந்திய வனஜீவராசிகள் திணைகள கால் நடை மருத்துவ உத்தியோகத்தர், குறித்த யானை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியே இறந்துள்ளதாகவும் 35 வயதுடைய இந்த யானை இன்னும் நீண்ட காலம் வாழக்கூடியதுடன் இதுபோன்ற அரிய வகை காட்டு யானை மூன்றையே வடக்கில் இதுவரை காட்டில் கண்டுள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில் வேண்டமென்றே படையினர் தமது விவசாய நடவடக்கையின் நலன்கருதி இந்த யானை கொன்றுள்ளனர் என வனவிலங்கதிகாரிகள் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து குறித்த படைப்பிரிவிற்கு பொறுப்பான கட்டளை அதிகாரிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தபோது நீதிமன்றம் அவருக்கு பிணை  வழங்கியுள்ளது.
யுத்தம் முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் மக்களின் காணிகளை தம்வசப்படுத்தியுள்ளது மட்டுமல்லாது அவற்றில் விவசாயம் செய்து வருகின்றனர்.
Print Friendly, PDF & Email