SHARE

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இயங்கிவந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த இருவர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றிற்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கில் உரிமையாளரான மாணிக்கம் வசந்தகுமார் மற்றும் ஜெயசீலன் துசிலன் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்வர்கள் ஆவர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் இயங்கிவந்த பாக்கு விற்பனையகம் கடந்த மாதம் பொலிஸாரினால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த பெரும் தொகையாக போதைப் பாக்குகள் மீட்கப்பட்டதோடு, இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த போதைப் பாக்கினை வெளிமாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து, குறித்த திருத்தகத்தில் பதுக்கி வைத்து மாவணர்வகள் உட்பட இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இது தொடர்பில் யாழ்.பொலிஸ் உயர் அதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார் திருத்தகத்தில் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது அங்கு விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிராம் போதை பாக்கினை மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் அத் திருத்தகத்தில் உரிமையாளரையும், அவருடைய உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று சான்றுப் பொருட்களுடன் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email