SHARE

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள நகர்ப்பகுதி காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள 600 ஏக்கர் காணி அடுத்த வருடமளவில் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் பல ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்சியாக பல தரப்புக்களால் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியான போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சில காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் வடக்கு மாகாணத்தில் உள்ள நகர் புறங்களில் உள்ள சில சில பகுதிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். குறித்த பகுதிகளில்  உள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறு பல பகுதிகளில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.  

அந்த வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள நகர்புற காணிகளில்  இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள முகாம்களை விட்டு வெளியேறவுள்ளதாக  உத்தரவாதம் அளித்துள்ளனர். இராணுவ முகாம்கள் அமைந்துள்ள ஏறத்தாள 600 ஏக்கர் காணி அடுத்த வருடம் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவுள்ளது. 

இதற்கான உத்தியோகப10ர்வ அறிவிப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பணத்தில் பிரதம மந்திரி தலைமையில்இடம்பெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Print Friendly, PDF & Email