SHARE

மீள்குடியேறிய மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து பெரும் தொகையை இராணுவத்துக்கு வழங்குவது உண்மை என தெரிவித்த மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடக்கு முதல்வர் கூறியதில் உண்மை உள்ளது எனவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மீள்குடியேறிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பெருமளவான நிதியை இராணுவத்துக்கு கொடுப்பதாக வடக்கு முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக, நேற்று யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார்.

முதலமைச்சர்கூறிய குற்றச்சாட்டை ஆரம்பத்தில் மறுத்த அமைச்சர் பின்னர் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்
முதலமைச்சர் கூறியதை பிழை என தெரிவிக்க மாட்டேன். இராணுவத்தினர் குடிகொண்டுள்ள மக்களின் காணிகளில் தற்போது அவர்களுடைய கட்டடங்கள் பல உள்ளன. அந்த கட்டடங்களை அகற்றுவதற்கு நாம் சில பண உதவிகளை செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் அந்த கட்டிடத்தை அகற்றுவர்கள்இ அதன் பின்னர் தான் அந்த காணிகளில் மக்களை மிள் குடியேற்ற முடியும்.

மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து பெரும் தொகையைத் தான் நாம் கொடுக்கிறோம். முதலமைச்சர் கூறியதில் உண்மை உள்ளது. ஆனால் அதை கொடுக்காமல் விட்டால் எமக்கு காணி கிடைக்காது.
பாதுகாப்பு அமைச்சால் குறித்த பணித்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை ஜனாதிபதி தான் செய்ய வேண்டும் அது தொடர்பில் எனக்கு தெரியவில்லை. எனது கடமையை நான செய்கிறேன் காசை கேட்கிறார்கள் நாம் கொடுக்கிறோம் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email