SHARE
-பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் Kerry McCarthy தெரிவிப்பு

இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கை தொடர்பிலான முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக பிரித்தானியாவின் Bristol East  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Kerry McCarthy தெரிவித்துள்ளார்.

அதேவேளை தேவைப்படின் குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் தனது சகாக்களின் ஆதரவை பெற்றுத்தர தயாராகவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஆயுத விற்பனை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ரமேஸ்கரன் மாணிக்கம் தலைமையிலான செயற்பாட்டாளர்களான நல்லதம்பி அருள்பிரகாஷம், நோபல் ரவீந்திரன் டேவிட், கிரோஜன் துரையப்பா மற்றும் சிவகுருநாதன் பிரகலாதன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிய போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

ஐ.நா ஆயுதவர்த்தக ஒப்பந்தத்தில் மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுத விற்பனைகளை செய்வதில்லையென கைச்சாத்திட்ட பிரித்தானியா, தமிழினப்படுகொலை செய்த பேரினவாத இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக ஆயுதவிற்பனை செய்துவருகின்றது.

அந்தவகையில் இதனை தடுத்துநிறுத்தும் முயற்சியில் தமிழ் தகவல் நடுவத்துடன் இணைந்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் சுமார் 6 மாத காலங்களைக்கடந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் பலனாக குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்தும் முன்பிரேணைக்கான 1480 ஆம் இலக்கத்தை கொண்ட முன்பிரேரணை (EDM) வாக்குகோரும் தளம் ஒன்று பாராளுமன்ற இணையத்தளத்தில் இணைக்கப்பட்டடுள்ளது.

இதுவரையில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email