SHARE

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting டம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்பேர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை சந்தித்த நாடுகடந்த அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் செயற்பாட்டாளர்களான சிவகுரு சயூபன் சிறிபாஸ்கரன் திவாகர் ஜெகானந்தன் ஆகியோரே குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.

நவீனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களுக்கொதிரான இன அழிப்பை செய்த இலங்கை அரசு தொடர்ந்தும் ஆயுதக்கொள்வனவில் ஈடுபட்டு வருவதோடு தமிழர்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்தவண்ணமே உள்ளது.

அந்தவகையில் பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதால் அது தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இரும்புக்கரம் மேலும் ஓங்கவே வழி வகுக்கும்.

எனவே இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்படி குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த சந்திப்பில் கோரிக்கையாளர்களின் விடயங்களை நன்கு கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறை குறித்து விசனம் தெரிவித்ததுடன் ஆயுத விற்பனை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தான் கலந்துரையாடுவதாஅகவும் உறுதியளித்தார்.

Print Friendly, PDF & Email