SHARE

-நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவர புலம்பெயர் தமிழ்ர்கள் கையெழுத்து வேட்டை

ப.சுகிர்தன்

இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானிய அசசை நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து மனுவில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கையொப்பமிட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையால், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கடந்த 3 வருடங்களாக நிறைவேற்ற தவறிவருகின்ற சிங்களப்பேரினவாத அரசு இழைக்கப்பட்ட யுத்தக்குற்றத்திற்கு பொறுப்பு கூறலை மறுத்து வருவதோடு காணமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் தீர்வை பெற்று கொடுப்பதிலும் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிரித்தானிய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிக்கும் பிரித்தானியா நேரடியாகவே சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை முன்னிலைப்படுத்த முடியும் என்ற வகையிலேயே குறித்த நடவடிக்கை முன்னனெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த விவிகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரோரணை நிறைவேற்றபடுமாயின் பிரித்தானியா அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு எடுத்துச்செல்லும்.

இந்நிலையிலேயே இலங்கை அரசை குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த விடுத்துள்ள கோரிகை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துகொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புpரித்தானிய நாடாளுமன்ற உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த iயெழுத்து மனு ஒரு இலட்சம் கையொப்பங்கள் என்ற இலக்கை எட்டும் போது குறித்த மனு பெதடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்நிலையிலேயே குறித்த மனுவில் கையொப்பமிடுமாறு பிரித்தானியா வாழ் அனைத்து உறவுகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கீழ் உள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் குறித்த மனுவினை நீங்கள் பார்வையிடலாம்.

இந்த மனு தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் பிரித்தரினயாவில் முழு அளவிலான பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருவதுடன் மக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரித்தும் வருகின்றது.

அந்தவகையில் இப்பணிகளில் ஈடுபட்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளரான புவலோஜன் பொன்ராசா இது தொடர்பில் எமது இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஈழத்தில் எம் இனத்தை படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நாம் முன்னிறுத்த வைக்கவேண்டும். இலங்கை இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக பிடித்துச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் இன்றுவரையில் விடுதலைசெய்யப்படவில்லை. ஆதற்கான பல போராட்டங்களை நாம் முன்னெடுத்த போது இலங்கை அரசு எந்தவொரு தீர்வையும் வழங்கவில்லை. எனவே இதற்கான சரியான தீர்வை சர்வதேசத்திடமிருந்தே நாம் பெற்றுகொள்ள முடியும்.

ஆதலால் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பிரித்தானியா தீர்மானம் நிறைவேற்ற முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து மனுவில் அனைவரையும் கையொப்பமிடுமாறு கோருகின்றோம். ஒரு இலட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டாலே இந்த விவகாரம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அந்தவகையில் 3 இலட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில் ஒரு இலட்சம் தமிழர்கள் ஆதரவு தெரிவிப்பது என்பது இலகுவானதொன்றே. எனவே இதில் அனைவரும் தங்கள் தேசத்திற்கான கடமை உணர்து iயொப்பமிட முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதே வேளை குறித்த மனு தொடர்பிலான விளக்கத்தினை அளித்த மற்றுமொரு செயற்பாட்டாளரான இக்னேஸ்வரன் யோகராஜா, இம் மனுவில் பத்தாயிரம் (10,000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்குப் பிரித்தானிய அரசாங்கம் எழுத்து வடிவில் பதில் அழிக்கும் என தெரிவித்தார்.

அதேநேரம் இம் மனுவில் ஒரு இலட்சம் (100,000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பிரித்தானிய நாடாளுமன்றத்தால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

எனவே, குறித்த மனுவில் பரித்தானியா வாழ் தமிழர்கள் மாத்திரம் தான் கையொப்பம் இட வெண்டும் என எண்ண வேண்டாம். ஏம் இனத்தினர் அல்லாத பிற இனத்தவர்க்கும் எமது பிரச்சினைகளை எடுத்துக்கூறி அவர்களிடமிருந்தும் இதற்கான ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்சனையை பிரித்தானிய அரசு மறந்து விடாமல் இருக்க இவ்வாறான அழுத்தக்களை நாம் தொடர்ந்து வழங்க வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு இன்னுமொரு கடமை உள்ளது என செயற்பாட்டாளர் இளையதம்பி கலைவாணன் தெரிவித்துள்ளார்.
குறித்த மனுவிற்கான கையொப்பத்தை பெறுவதோடு ஆதரவு காட்டுவதோடு மட்டுமல்லாது தத்தமது தொகுதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை குறித்த விவகாரம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு வரும் வேளையில் அதற்கு ஆதரவாக பேச வைக்கவும் வேண்டும் என்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன செயல்களும் எம் இனத்திற்கான நீதியை பெற வழி வகுக்கும் என அவர் தெரிவித்தார்.

கையொப்பமிடுவதற்கு இலகு படிமுறைகள்:
  • கீழ்காணும் இணைப்பை அழுத்துங்கள்
  • https://petition.parliament.uk/petitions/225395
  • அதில்காணப்படும்‘Sign this petition’என்றவிசையைஅழுத்துங்கள்.
  • திரையில்தோன்றும்படிவத்தில் ‘I am a British Citizen or UK resident’என்ற வாசகத்திற்கு அருகில் உள்ளபெட்டியில் புள்ளடியிடுங்கள்.
  • பின்னர்‘Name’என்ற பகுதிக்குள் உங்கள் முழுப்பெயரை பதிவு செய்வதோடு Email address என்ற பகுதியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கீழே Postcode’ என்ற பகுதியில் உங்கள் தபால் குறியீட்டு எண்ணையும் பதிவு செய்யுங்கள்.
  • அதனையடுத்து Email me whenever there’s an update about this petition எனும் கட்டத்தினுள் தொடுகை செய்து, தொடர்ந்து Continue எனும் விசையை அழுத்துங்கள்.
  • இப்பொழுது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பிரித்தானியா நாடாளுமன்றத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைகக்கப்பட்டிருக்கும். அந்த மின்னஞ்சலை நீங்கள் பார்க்கும் போது அதில் ஒரு இணைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும்.
  • அந்த இணைப்பை நீங்கள் அழுத்தும் போது குறித்த மனுவிற்கான உங்கள் கையொப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படும்.

 

 

 

Print Friendly, PDF & Email