SHARE

வடமராட்சி பருத்தித்துறை கடலில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளம் திணைக்களம் பணிப்பாளர் வர வேண்டும் உள்ளிட்ட  ஐந்து கோரிக்கைகளை வடமராட்சி பருத்தித்துறை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

மீனவர்களை விடுவிக்குமாறு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ச்சியான போராட்டத்தையும் மீனவர்கள் ஆரம்பித்த உள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் அத்து மீறி சட்ட விரோதமாகத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் நேற்றிரவு வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நுழைந்த போது வடமராட்சி பருத்தித்துறை மற்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டடிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸார் பிரதேச செய்லர் மாவட்ட கடற்தொழில் நீரையும் வளம் திணைக்களம் பணிப்பாளர் உள்ளிட்ட மீனவர்களுக்கும் இடையில் அவசர சந்திக்கின்றது நடைபெற்றது.

ஆனாலும் மீனவர்களை விடுவிக்கும் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  அதாவது தொடர்ந்தும் தாம் பாதிக்கப்பட்டு வருவதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றும் கடற்தொழில் பணிப்பாளர் நேரடியாக வருகை தர வேண்டுமென்றும் ஐந்து கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.

ஆயினும் அந்தப் கோரிக்கைக்கு சாதகமான பதில் அல்லது முடிவு கிடைக்காத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள கொள்ளப்பட்டு அதனை நிறைவேற்றும் வரையில் தாம் கடலுக்கு செல்லக் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மீனவர்கள் கொட்டகைகளை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Print Friendly, PDF & Email