SHARE
-பிரித்தானியா நாடாளுமன்றில் மகன் கண்ணீர் மல்க சாட்சியம்

புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம்திரும்பிய தனது தந்தை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் வரும் போது காணாமல் போயுள்ளார் என நந்தகோபன் சிவராசா தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற காணமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்து கொண்டு சாட்சியமளித்த அவர் தனது தந்ததையான சின்னையா சிவராஜா என்பவரே கடந்த 2000 ஆம் ஆண்டு காணமல் போயுள்ளார் என கூறினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு புலம்பெயர் தேசமொன்றிலிருந்து தாயகம் திரும்பிய அவர் எங்களுடன் இணைந்து கொள்வதற்காக திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கப்பல் வழி பாதையினூடாக வர ஆயத்தமானார். அந்தவகையில் திருமலையில் கப்பலை எதிர்பார்த்து காத்திருந்த அப்பா ‘சிற்றி ஒப் றிங்கோ’ எனும் கப்பலில் பருத்தித்துறை செல்வதற்காக பயணச்சீட்டு பெற்று கொண்டு 30.08.2000 ஆம் ஆண்டு அன்று கப்பலில் ஏறியுள்ளார்.

நாங்கள் எல்லோரும் மறுநாள் அப்பாவின் வரவை எதிர்பார்த்து பருத்தித்துறை துறைமுகத்தில் காத்திருந்த போது கப்பல் வந்து கரை சேர்ந்தது. பயணிகள் எல்லோரும் வந்து இறங்கினார்கள். ஆனால் அப்பா மட்டும் வரவில்லை. அதேவேளை அக் கப்பலில் பயணப் பை ஒன்று அனாதரவாக இருந்தது என கூறி எங்களிடம் கொடுத்தார்கள். ஆதனை நாங்கள் பார்த்த போது அது எங்கள் அப்பாவினதே என அடையாளம் கண்டு கொண்டோம் என கூறியவர் கண்ணீர் மல்கத் தொடங்கினார்.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசை பொறுப்புகூற பிரித்தானிய அரசை வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாடு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலரது நேரடி சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இதில் கலந்து கொண்டு சாட்சியமளித்த போதே நந்தகோபன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் அளித்த சாட்சியத்தின் முழுவடிவம் பின்வருமாறு,

Print Friendly, PDF & Email