SHARE

ஆவா குழுவை மூன்று மாதங்களில் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஆவா குழு போன்ற வன்முறை குழுக்களை 3 மாதங்களுக்குள் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என்று ஆளுநர் அங்கு தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகிறது. ஆளுநரால் 3 மாதங்களுக்குள் ஆவாக் குழுவை இல்லாமல் செய்ய முடியும் என்றால் ஏன் அதனை அரசாங்கம் ஆளுநர் ஊடாகக் கடந்த 5 வருடங்களில் செய்யவில்லை? அல்லது ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் ஆவா குழுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.

மேலும், நாங்கள் வேறு நிதியங்களைப் பாவித்து பணத்தை வருவிக்கின்றோம் என்று கண்டால் அவற்றை மூடி விட உடனே நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம். அண்மையில் பிரித்தானியாவுக்கு சென்ற வட மாகாண ஆளுநர் உதவிகளை செய்யுமாறும் முதலீடுகளை செய்யுமாறும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தமை வேடிக்கையாக இருக்கிறது. அதே ஆளுநர் தான் எமது நிதியத்தை எமக்குக் கிடைக்கவிடாமல் நாடகமாடி வந்தவர் என தெரிவித்தார்

Print Friendly, PDF & Email