SHARE
செயற்பாட்டாளர் சுரேஸ் சுப்பிரமணியத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby நாடாளுமன்ற முன்பிரேரணைக்கான மனுவில் (Early Day Motion) கையொப்பமிட்டுள்ளார்.

செயற்பாட்டாளர் சுரேஸ் சுப்பிரமணியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் குறித்த பிரேரணைக்கான மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

Lewisham East தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby  யை அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தனது தலைமையிலான குழுவினருடன் சுரேஸ் சுப்பிரமணியம் சந்தித்திருந்தார்.

இதன் போது தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகள் குறித்து எம்.பி. க்கு எடுத்து விளக்கியதுடன் ஆயுத விற்பனைத் தடை விதிக்கக்கோரும் முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனை (UK ARMS SALES TO SRI LANKA) என்ற தலைப்பில் 1480 ஆம் இலக்கத்தினைக்கொண்ட குறித்த முன்பிரேணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுபினர் Janet Daby, அது தொடர்பில் செயற்பாட்டாளர் சுரேஸிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து செயற்பாட்டாளர் சுரேஸ் சுப்பிரமணியம் எமது இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

தழிழருக்கு எதிரான இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டுமென கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடபட்டுவருகின்றனர்.

தமிழ் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் அதன் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் சுமார் 11 மாதகாலத்திற்கு மேலாக மேற்கொண்டு வந்த தொடர் நடவடிக்கைகளின் பயனாக லிபரல் டெமோக்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் டேவியினால் கொண்டுவரப்படும் மேற்படி முன்பிரேரணைக்கு கட்சி பேதங்களை கடந்து இதுவரையில் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email