SHARE

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நாடாளுமன்றத்தை நாளை (14) கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாகஇ ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியினால் கடந்த 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2095ஃ50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதன்படி நாளை காலை 10 மணிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email