SHARE

சிங்கள கடும் போக்கு வாதிகளிடம் இருந்து தமிழர்களை காப்பற்ற வடக்கு கிழக்குக்கு அமெரிக்க வர வேண்டும் என  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு , கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் பொது செயலாளர் ஜி. ராஜ்குமார் அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

யாழ்.நல்லூர் முன்றலில் இன்று காலை குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்று நாவலர் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப்க்கான கடிதம் ஒன்றினை அச் சங்கத்தின் செயலாளர் கையளித்தார்.

குறித்த கடிதத்திலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் காணாமல்போன நம் அன்பானவர்களை நாம் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கும் நாங்கள் காணாமல்போன தமிழ் குழந்தைகளின் பெற்றோர்களே. தமிழ் குழந்தைகளை காணாமல்போன சில இடங்களில் இரகசியமாக வைக்கப்பட்டடுள்ளார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

இந்த குழந்தைகளின் தாய்மார்கள் 631 நாட்களாக தொடர்ந்தும்  இப்போது  சுழற்ச்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.

எங்கள் அனுபவத்தின் படி கடைசி எழுபது ஆண்டுகளில் இருந்து, இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு தேவையான  அல்லது நியாயமானதாக எதையும் செய்யாது என நாம் அறிவோம்.

தமிழ் மக்களுக்காக கீழ்க்கண்டவற்றை செய்ய உங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென நாம் தயவுடன் கேற்கிகறோம்.

1. எங்கள் 25,000 மேல்  காணாமல் போனோரை கண்டு பிடிக்க உதவுங்கள்.

2. தமிழர்களுக்கு சர்வதேச நீதி மற்றும் பொறுப்பு கூறலுக்கு   உதவுங்கள்.

3. ஸ்ரீலங்காவின் வடகிழக்கில் இருந்து பாலியல் பலாத்கார மற்றும் இனப்படுகொலையான இலங்கை இராணுவத்தை துரத்தவும்.

4. தமிழர்களின் வீடு மற்றும் பண்ணைகளை விட்டு வெளியேறும்படி இலங்கை இராணுவத்தை கட்டாயப்படுத்துதல்.

5. ஸ்ரீலங்கா இராணுவம் நடத்தும் பாலியல் அடிமை முகாம் அகற்ற உதவுங்கள்.

6. ஒடுக்கப்பட்ட பிரசங்கத்தைத்தை ஓதும்  இலங்கை மகா சங்கே பெளத்த கோவில்களை கட்டியெழுப்ப தாயகத்தில்   தடை செய்யுங்கள்

7. வடகிழக்கு இலங்கையில் சாத்தியமான சீன படையெடுப்பை நிறுத்த உதவுங்கள்.

தமிழர்களின் பல துன்பங்களை நாம் பட்டியலிடலாம், ஆனால் மேல் உள்ளவை  உடனடி கவனம் செலுத்த வேண்டிய மிக அவசரமானவை.

இராணுவம் அழுத்தம் கொடுக்கும் மொழியைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமே இலங்கை பதில் கூறுகிறது. 1987 ல் இந்தியா வடகிழக்குப் பகுதிக்கு வந்து, சிங்களத் தலைவர்கள் நடைமுறைப்படுத்திய பட்டினையை நிறுத்த முடிந்தது. 2002 ல், தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் வலுவாக இருந்தபோது, அரசியல் தீர்வுக்கு ஸ்ரீலங்கா இணக்கம் தெரிவித்திருந்தது.

உங்களுக்கும் உங்கள் நாடுக்கும் மட்டுமே உங்கள் இராணுவ வலிமை மற்றும் மனித உரிமைகள் மீதான பாராட்டு ஆகியவற்றைக் கொண்டுவர முடியும். 1997 இல் கொசோவோவுக்கு உதவியதுடன், பல உயிர்களை காப்பாற்றியது போலவே, ஐ நா  ஒப்புதலுக்காக அமெரிக்கா காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

சீனர்கள் சிங்களப் பகுதியுடன் நடத்திய 99 ஆண்டுகால குத்தகை செய்தது போல, நாமும்  வடகிழக்குப் பகுதியில் எங்கள் மூலோபாய இடங்களில் சிலவற்றை குத்தகைக்கு  அமெரிக்காவுக்கு விடுவதற்கு நாங்கள் விரும்புகிறோம். இது சீன ஊடுருவல்களில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு ஸ்ரீலங்காவில்  ஒரு நீடித்த அரசியல் தீர்வைக் கொண்டுவரும்.

திரு. ஜனாதிபதியே, தென் சூடான், கொசோவோ, போஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் இன்னும் பல இடங்களில் அநீதிகளையும் துஷ்பிரயோகங்களையும் நிறுத்த திறம்பட நடத்த முடியும் என்றால்,  சிங்களக் கடும்போக்கு இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதற்கான நேரம் இதுவே.

விரைவில் வடக்கு கிழக்குக்கு அமெரிக்காவை  வரவேற்க தமிழர்கள் விரும்புகின்றனர்.என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Print Friendly, PDF & Email