SHARE

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் மாபெரும் மனித உரிமைகள் தின நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் New Malden இல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிரகடணப்படுத்திய அனைத்துலக மனித உரிமைகள் தினம் வருடம் தோறும் உலகலாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காகவும் மீறப்பட்ட உரிமைகளை நினைவுபடுத்தி அவற்றை பாதுகாத்துகொள்ளவும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் அவைசார்ந்த அமைப்புக்கள் டிசம்பர் மாதத்தில் இத்தினத்தினை நினைவுகூறுகின்றனர்.

இந்நிலையிலேயே தொடர்ச்சியாக மனித உரிமைகள் செயற்பாட்டில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வரும் தமிழ் தகவல் நடுவம் (TIC) இம்முறை மனித உரிமைகள் தினத்தினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி New Malden எனும் இடத்தில் கொண்டாடவுள்ளது.

Shiraz Mirza Manor Park அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில் உலகளவில் மனித உரிமைகள் விடயங்களில் பிரபல்யமானவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதுடன் விசேடமாக நெருக்கடியான சூழலில் மனித உரிமைகளை நிலைநாட்ட பாடுபட்டவர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email