SHARE

பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலங்கையைக் கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

பண மோசடி மற்றும் எதிர்ப்பு பயங்கரவாத நிதிக் கட்டமைப்பின் மூலோபாயக் குறைபாடுகளைக் கொண்ட 23 நாடுகளைக் கொண்ட கறுப்புப் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைப்பு முறையைப் பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து தடுக்கும் வகையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தங்களது குறைபாடுகளை விரைவாகச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

23 நாடுகள் கொண்ட இப் பட்டியலில் இலங்கை 18 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email