SHARE

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழர்களுக்கு ‘கழுத்தை அறுப்பேன்’ என சைகை காண்பித்து அச்சுறுத்தல் விடும் செயலானது லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவின் கடமையுடன் தொடர்புடைய செயல் இல்லை என வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்று அறிவுத்துள்ளது.

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர அதிகாரம் உள்ளமையால் அவரை எந்தவித விசாரணைகளுக்கும் உட்படுத்த முடியாது என இலங்கை அரசு தொடர்ச்சியாக வாதாடி வந்த நிலையிலேயே நீதவான் நீதிமன்றம் இன்று இந்த முடிவை அறிவித்துள்ளது.

இதனால் பிரியங்க பெர்னாண்டோவிற்கு உள்ள இராஜதந்திர தந்திர முக்தி செல்லுபடியாகது எனவும் அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதியால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக ICPPG யினால் தொடரப்பட்ட வழக்கில் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அந்தவகையில் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர பாதுகாப்பு இருப்பதனால் அவரை எந்தவித விசாரணைகளுக்கும் உட்படுத்த முடியாது என்ற அவர் தரப்பினரது வாதம் தவறு என நிரூபிக்கப்பட்டதுடன் பெர்ணான்டோவிற்கு எதிராக முன்னரே மன்றில் நிரூபிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களும் நீதிபதியினால் நீக்கப்படவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் தகிதி நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட வழக்கு நடவடிக்கைகள் வரை பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளியாகவே இனங்காணப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு (2018) இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியா கடமையாற்றி பிரியங்கா பெர்னாண்டோ, ஆரப்பாட்டக்காரர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் ஒன்றினை விடுத்திருந்தார்.

இதனையடுத்து அவரது குறித்த செயலுக்கு எதிராக இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தினால் (ICPPG) தொடரப்பட்ட வழக்கில் பிரியங்கா பெர்னாண்டோ மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இரண்டு நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டது.

வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றினால் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழுவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதில் பிரியங்கா தரப்பிலிருந்து சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பிடியாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு அவருக்கிருந்த இராஜதந்திர பாதுகாப்பு சலுகைகளை காரணம் காட்டி வெளிநாட்டு அமைச்சினூடாக குறித்த வழக்கை மீண்டும் நீதிமன்றிற்கு கொண்டு வந்தது.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரியங்காவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிபதியினால் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு எதிரகா நிரூபிக்கப்பட்டிருந்த இரு குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்வில்லை.

இந்த வழக்கு விசாரணையின் போது பிரியங்கா தரப்பிலிருந்து சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர். இதன் போது குற்றச்சாட்டப்பட்டவர் தரப்பு நியாயங்களை மன்றிற்கு தெரிவிக்கும் படி நீதிபதி அவர்களை கோரிய போது அவற்றை சமர்ப்பிக்க அவர்கள் நீதிபதியிடம் கால அவகாசம் கோரியிருந்தனர். இதனையடுத்து குறித்த வழக்கினை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு அதாவது இன்றைய தினம் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையிலேயே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.

வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றின் இலக்கம் 01 அறையினில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரியங்கா பெர்னாண்டோ தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு இராஜதந்திர பாதுகாப்பு சலுகைகள் இருப்பதால் அவரை எந்தவிதமான விசாரணைகளுக்கு உட்படுத்த முடியாது என தெரிவித்ததுடன் அவருக்குள்ள உத்தியோகபூர்வ கடமைகளையும் பட்டியல் படுத்தி மன்றில் தெரிவித்தார்.

அதில் பிரதானமாக இலங்கை அரசுக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்படுபவர்கள் மற்றும் LTTE செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்கு அறிவிப்பது என்ற கடமையும் உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் போது குறுக்கிட்ட நீதிபதி குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோக பூர்வ கடமைகளில் எங்கேயாவது கொலை அச்சுறுத்தல் விடுக்கலாம் அல்லது அவ்வாறான சைகை காண்பிக்கலாம் என எழுதப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். இதன் போது மன்றின் பார்வையாளர் அரங்கில் சிரிப்பொலிகள் எழுந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் இராஜதந்திர சலுகை என்ற வாதம் தவறு என்பதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தொடர்பிலான வழக்கறிஞர்,

பிரியங்கா பெர்னாண்டோவிற்கு தற்போது இராஜதந்திர சலுகைகள் இல்லை என கூறினார். அதாவது, குறித்த குற்றச்செயலை புரியும் போது அவர்கள் கூறும்படியான பாதுகாப்பு சலுகைகள் அவருக்கு இருந்த போதிலும் தற்போது அவர் இலங்கை அரசால் மீளப் பெறப்பட்டுள்ளதால் அவருக்கான சலுகைகள் எதுவும் இல்லை எனவும் அதேவேளை பிரியங்கா பெர்னாண்டோ செய்த செயலானது (கழுத்தை அறுப்பேன் என்ற சைகை) அவரது உத்தியோக பூர்வ செயற்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான அமர்வில் இன்றை வழக்கின் இறுதி அறிக்கையை வாசித்த நீதிபதி அதில் பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பில் முன்வைக்கப்பட்ட இராஜதந்திர சலுகை அதிகாரம் செல்லுபடியாகது எனவும் அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என அறிவித்தார்.

அதேவேளை, பிரியங்கா பெர்னாண்டோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அழைப்பாணை தொடர்பிலான விசாரணைகள் அடுத்தகட்ட அமர்வின் போது விசாரணைக்குட்படுத்தப்படும் என தெரிவித்து எதிர்வரும் 15 ஆம் திகதி வழக்கினை ஒத்திவைத்தார்.

இன்று நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ‘பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்’ என்ற கோசங்களை எழுப்பிய வாறு புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றின் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ICPPG யினால் தொடரப்பட்டுள்ள மேற்படி வழக்கின் சட்ட ஆலோசகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் இன்றைய வழக்கு விசாரணைகளின் முடிவில் நமது ஈழநாடு இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,

Print Friendly, PDF & Email