SHARE

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு பிரித்தானிய பாராளுமன்றில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப்பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும் இன அழிப்பின் 10 ஆண்டுகள் அடைந்துள்ள போதிலும் இனியும் காலம் தாழ்த்தாது தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரித்தானிய அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இன்றை நிகழ்வு இடம்பெறவுள்ள.

பாராளுமன்ற பிரதான கட்டடத்தொகுதியின் 10 ஆம் இலக்க அறையில் மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்வின் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரான ஜெரமி கோர்பின் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான Shadow Chancellor John McDonnell MP, Shadow Foreign Secretary Emily Thornberry MP, International Trade Secretary Barry Gardiner MP உட்பட மேலும் பல தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் இவ் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email