SHARE

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலை அரச செலவில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலைதாரியின் உடலை தமிழர்களின் பிரதேசத்தில் புதைப்பதற்கு  சில அரச அதிகாரிகள் விடாப்பிடியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

காத்தான்குடியைச் சேர்ந்த பயங்கரவாதியின் உடலை காத்தான்குடிக்கு கொண்டுவரக் கூடாது என்று காத்தான்குடி பொது அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில், குறித்த உடலை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அடக்கம் செய்ய சில தமிழ் அரச அதிகாரிகள் முயன்ற போதும் மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழ் மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக பிரதேச செயலாளர் தயாபரன் அவர்கள் குறித்த உடலை தனது பிரதேச எல்லைக்குள் புதைக்க முடியாது என அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

ஆனால் மீண்டும் மீண்டும் குறித்த தற்கொலை பயங்கரவாதியின் உடலை தமிழர் பகுதியில் புதைப்பதற்கு கிராமசேவையாளர் அண்டன் அவர்கள் விடாப்பிடியாக உள்ளதாகவும் இதனால் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் இனவன்முறையை ஏற்படுத்த முனைவதாக மாவட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இரா துரைரெட்ணம் பின்வருமாறு கூறியுள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழின படுகொலையை திட்டமிட்டு செய்த தற்கொலையாளியின் பாகங்களை  என்ன அடிப்படையில் தமிழ் பிரதேசங்களில் உள்ள மயானங்களில் நல்லடக்கம் செய்ய  முடியும் என துரை ரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார் 

இன்று நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் . அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாரியாக வந்து வெடித்தவரின் சொந்த பிறப்பிடம் காத்தான்குடி. அவர் வாழ்ந்த இடம் காத்தான்குடி அந்த இடத்தில் அவரது உடல் பாகங்களை புதைக்காமல்  மட்டக்களப்பில் உள்ள மயானங்களில் புதைக்க முனைவது நாகரீகம் இல்லை.

மேலும், இது மட்டக்களப்பு மாவட்டத்தில் இனரீதியான ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடாகவே இருக்கும். என்ற ஒரு ஐயப்பாடு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

ஆகவே தயவு செய்து தமிழ் மக்களை  கொலை செய்த தற்கொலைதாரியின்  உடலை மட்டக்களப்பில் புதைப்பது என்பது ஒரு இனவாதத்தை தூண்டு செயலாகவே நான் பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.Share

Print Friendly, PDF & Email