SHARE

– மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 41 வது அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக தனது கவலையை வெளியிட்டார்.

முக்கியமாக, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒற்றுமையான அணுகுமுறை இல்லாதது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என கூறினார்.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சில மதத் தலைவர்களின் வன்முறையைத் தூண்டும் விதமான சமீபத்திய அறிக்கைகள் கவலையை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு அரசியல் தலைவர்கள், மத மற்றும் சமூக தலைவர்கள் அனைவரும் இணைந்து வன்முறைகள் மற்றும் இனரீதியாக இருக்கும் பாகுபாடுகளை களைவதற்கான வழிமுறைகளை காணப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்படுகளை பாராட்டியுள்ள அவர், தொடர்ந்தும் தன்னுடைய ஆதரவு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email