SHARE


யஸ்மின் சூக்கா விசேட உரை நிகழ்த்­துவார்

இலங்­கையில் இடம்­பெற்ற சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பி­லான சாட்­சி­யப் ­ப­தி­வு­க­ளுடன் கூடிய தக­வல்­களை உள்­ள­டக்­கிய மற்­றுமொரு ஆவ­ணத்­தினை உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச அமைப்பு எதிர்­வரும் புதன்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பக்க நிகழ்வாக வெளி­யி­ட­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 42ஆவது கூட்­டத்­தொடர் நடை­பெற்று வரு­கின்ற நிலையில் உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச அமைப்பின் (ITJP) ஏற்­பாட்டில் பக்க நிகழ்­வொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­கழ்வில் குறித்த அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தோடு அமெ­ரிக்­காவின் போர்க்­குற்­றங்கள் தொடர்­பான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள விசேட ஆய்­வுரை நிகழ்வில் உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச அமைப்பின் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா, அவ்­வ­மைப்பின் செயற்­றிட்ட ஒருங்­கி­ணைப்­பாளர் பிரான்ஸஸ் ஹரீசன் மற்றும் புலனாய்வாளர் வான்டர் ஸ்டாடென் பொந்தோஷ் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். 

Print Friendly, PDF & Email