SHARE

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் நேற்று (21) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரது உடலை நாளை (23) வரை எரிக்கவோ, எரிக்கவோ முடியாது என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னரே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று (22) தடை உத்தரவு வழங்கியுள்ளது.

முன்னதாக, தேரரின் இறுதிக் கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படையினர் ஏற்பாடுகளை செய்துவந்தனர்.

இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று பின்னிரவு முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு பதில் நீதவானால் ஆலயத்தில் உடலை எரிக்க உடனடித் தடை வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே நீதிமன்றத்தால் நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி விகாரைக்கு பொறுப்பான பிக்குவையும் நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.

அத்துடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் இயல்பு நிலைமையை உறுதிப்படுத்துமாறும் முல்லைத்தீவு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தேரரின் உடல் தற்போது நீராவியடியில் உள்ள அவரது விடுதியில் வைக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email