SHARE

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்- ஜோன் மெக்டோனல்

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மிருகத்தனமான அடக்குமறை இனப்படுகொலைக்கான முயற்சியாக அங்கீகரிக்கப்படவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்றின் உறுப்பினரும் தொழிற்கட்சியின் நிழல் அதிபருமான ஜோன் மெக்டோனல் தெரிவித்துள்ளார்.

அமைதியான நீண்டகால அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள தமிழர்களுக்கு உரிமை உண்டு என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அறிக்கையில் இலங்கையின் சிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கான மனித உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்த ஐ.நா மற்றும் காமன்வெல்த் மூலம் நாங்கள் செயல்படுவோம் என தொழிலாளர் கட்சி உறுதியளித்துள்ளதாக தெரிவித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ ஆக்கிரமிப்பு கவலையளிக்கிறது. இலங்கை இராணுவத்தை வடக்கு-கிழக்கிலிருந்து மீளப்பெறவேண்டும். தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் குறிப்பாக கவலையடைகிறோம்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை அங்கு எதிர்காலத்திற்கான கவலைகள் மற்றும் அச்சங்களை முன்வைக்கும் ஒரு நிலமையை கொண்டிருப்பதால் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் கண்காணிக்க வேண்டும்.

மேலும் இலங்கை தொடர்பில் பிரித்தானிய அரசிற்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு என நம்புகிறேன். இலங்கையுடனான எங்கள் உறவு வர்த்தக உறவு. குறிப்பாக மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டது என்பதை உறுதி செய்வதன் அடிப்படையில். ஆனால் இது ஐ.நா. தீர்மானத்தை செயல்படுத்துவதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

மேலும் தொழிற்கட்சி பிரித்தானியாவிலுள்ள தமிழ் சமூகததிற்காக எப்போது குரல் கொடுக்கும். அதேவேளை தாயகத்திலுள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் என அவர் அதில் தெரிவிதுள்ளார்.

Print Friendly, PDF & Email