SHARE

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்படுமென அறிவிக்கப்பட்டமை பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளன.

எனினும் தமிழ் நிகழ்வுகளில் தேசிய கீதம் இசைப்பது வழமைபோன்றே இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

கிளிநொச்சி தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சி கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழவிலேயே தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது.

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தேசிய கீதத்தினை தமிழில் பாட முடியும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அண்மையில் கூறப்பட்டது.

எனினும் இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email