SHARE

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +428 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் +494  ஆக பதிவாகிய இறப்புகள், இன்று மீண்டும்  66 ஆல் குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 33,614   ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிதாக அடையாளம் காணப்பட்ட +3,446  தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233,151 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இத்தாலியில் +262 இறப்புகளும்  ஸ்பெயினில் +217  இறப்புகளும், சுவீடனில் 147 இறப்புகளும்,  ரஷ்யாவில் +93 இறப்புகளும், பெல்ஜியத்தில் +60 இறப்புகளும், சுவீடனில் +69 இறப்புகளும், ஸேர்மனியில் +7 இறப்புகளும்,  மறுபுறம் மெக்ஸிக்கோவில் +294  இறப்புகளும், பிறேசிலில் +118 இறப்பகளும்,   பதிவாகி உள்ளன.

ஆரம்பத்தில் அதிகளவிலான இழப்புகளை தாங்கிய ஐரோப்பிய ஒன்றிய  நாடுகள் தொடர்ந்தும் 200களில் இறப்புகளை கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் நிலையில்,  பிரிட்டனின் இறப்புகள் 400களில் தொடர்கிறன.  எனினும்  இந்த நாடுகளில் விதிக்கப்பட்ட முடக்க கட்டுப்பாடுகளில், தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 85 ஆயிரத்தைக் கடந்து 85,276 ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,432,238   ஆக உயர்ந்துள்ளது.

Print Friendly, PDF & Email