SHARE

சூக்காவிற்கு ஆதரவான ஐ.நா.வின் முன்னாள் ஆணையாளர்கள்

உண்மைக்கு நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சுமார் 50 ற்கும் மேற்பட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் உட்பட 150 மேற்பட்ட உலகின் முக்கியத்துவம்வாய்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகின்றன.

இலங்கை தேசிய உளவுத்துறையின் பிரதானி மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ்சலே தனது பெயருக்கு ஜஸ்மின் சூக்கா களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவித்து 100 கோடி ரூபாய் நட்ட ஈடுகோரியதுடன் அவர் பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் அவர்மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்நிலையிலேயே ஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் குற்றச்சாட்டை உலகெங்கிலுமுள்ள பலவேறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளதுடன் சூக்காவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளதுடன் கையொப்பமுமிட்டுள்ளனர்.

ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைக்கான உயர் ஆணையாளர்களான சைய்ட் ஹாட் அல்குசைன் மற்றும் நீதிபதி நவி பிள்ளை உட்பட நியோக் ஸ்ரேற் உச்ச நீதிமன்றின் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் உலகெங்கிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் 50 மேற்பெட்ட முக்கியஸ்தர்கள் கையொப்பமிட்டுள்ள ஜஸ்மின் சூக்காவிற்கான ஆதரவுப் பகிரங்க அறிக்கையில்

சூக்காவிற்கு எதிராக இலங்கை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டிருப்பவை சூக்காவிற்கும் அவருடைய அமைப்பிற்கும் மனித உரிமைகள் சமுகத்திற்கும் எதிரான தாக்குதல் மட்டுமல்லாமல்ல இது அவருடைய பணியுடன் தொடர்புபட்ட பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் உயிர்தப்பியவர்தல் மீதான தாக்குதலும் ஆகும்.

மனித உரிமைகளையும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களையும்
பாதுகாக்கும் அவருடைய சட்ட ரீதியான செயற்பாடுகள் மேலும் குறிப்பாக உண்மை மற்றும் நீதிக்கு ஆதரவான அவரது செயற்பாடுகளுக்கு நேரடிப் பதிலடியாகவுள்ள சூக்காவிற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து நாங்கள் எமது ஆழ்ந்த கரிசனையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை சர்வதேச உரிமைகளை மீறுவதாக உள்ளதுடன் நீண்ட காலமாக உள்ள அநீதி மற்றும் இலங்கியில் யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றத்திற்கான அரசின் பொறுப்புக்கூறலிலிருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இன்னுமொரு முயற்சி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூலை 2010 இல் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது புரியப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றி ஐ. நா. பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவில் ஜஸ்மின் சூக்கா நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://istandwithyasmin.blogspot.com/2020/07/i-stand-with-yasmin-tamil.html

Print Friendly, PDF & Email