SHARE

வடமராட்சி, வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதை தடை செய்யக்கோரி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையான வழக்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருத்தித்துறை நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட கடலட்டை பிடிப்பதற்கான தடை உத்தரவை புதுப்பிகுமாறு கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு விசாரணைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்று வரை வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று வழக்கின் முடிவினை அறிவித்த நீதிபதி சயிலவன் காயத்திரி,

கடலட்டை பிடிப்பதற்கான ஒப்புதலை பருத்தித்துறையைச் சேர்ந்த ஐந்து மீனவ அமைப்புக்கள் நீரியல்வளத்திணைக்களத்தினருக்கு வழங்கியிருப்பதாகவும், குறித்த விடயத்தினை நீரியல் வளத்திணைக்களத்தினரே கையாண்டு தீர்வைக் காணமுடியும் என்பதாலும் குறித்த வழக்கினைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று குறித்த தீர்ப்பு சட்டத்தரணி சுமந்திரனின் வாக்கு வீதத்தில் செல்வாக்குச் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email