SHARE

சிறிலங்கா படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி மற்றும் அவரது பெற்றோர் அயலவர்களது நினைவேந்தல் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7 ஆம் .திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியிலிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதுடன் அவரை படுகொலையும் செய்தனர்.

அதேவேளை செம்மணி இராணுவ முகாமில் கிருசாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதையடுத்துஇ தனது பிள்ளையை தேடி இராணுவமுகாமிற்கு சென்ற மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59), மாணவியின் சகோதரனான யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான் குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் அயலவரான தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகிய மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர்.

அதேவேளை யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள் இ காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என 600 பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email