SHARE

தமிழின படுகொலைக்கு நீதிகோரி ஜெனிவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின் வீடுகளுக்கு சென்ற இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை 4 ஆம் மாடிக்கு அழைத்தும் உள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸ் நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் ஐ.நா.வை நோக்கிய மாபெரும் பேரணி இடம்பெற்றது. இதில் புலம்பெயர் தேசத்திலுள்ள்ள தமிழ் உறவுகள் பலர் கலந்துகொண்டனர். இதுதொடர்பிலான செய்திகள் படங்கள் பத்திரிகைகள் இ மற்றும் இணையங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களின் அடிப்படையில் இலங்கை புலனாய்வாளர்கள் படத்தில் இருப்பவர்கள் சிலரை தேடப்படும் நபர்களாக அடையாளப்படுத்தி அவர்களின் இலங்கையிலுள்ள வீடுகளிற்கு சென்று உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதே நேரம் அவர்களது குடும்பத்தினரை 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு வரும்படி (CID) குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் அழைப்பு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email