SHARE
lockdown stencil print on the grunge white brick wall

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்  வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கம்பஹா – திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் குறித்த பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையிலேயே நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email