SHARE

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பிரித்தானியாவில் வழங்கப்பட்டுள்ள தடை பிழையானது என பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த வழக்கின் இறுதி விவாதம் இன்று (21) பிரித்தானிய நீதிமன்றில் விசேட தீர்ப்பாயம் ஒன்றின் (POAC) முன்னிலையில் நடைபெற்றிருந்த நிலையிலேயே, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது என நீதிமன்று சற்று முன்னர் தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

தடையை எதிர்த்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடரப்பட்ட வழங்கிலேயே மேற்படி தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம், அதில் 10 வருடங்களாக வன்முறை இல்லை என்ற அடிப்படையிலேயே அவர்கள் மீதான தடை தவறு என பகிரங்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில் விசேட தீர்ப்பாயத்தின் தீர்ப்பினையடுத்து விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரித்தானிய அரசு இனிவரும் நாட்களில் நீக்குமா?இல்லையா? என்பது எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ  அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட இந்த  வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இதேவேளை இந்த தீர்ப்பினையடுத்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ள பிரித்தானியா வாழ் புலம் பெயர் தமிழர்கள் இனிப்புப் பண்டங்களை பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.

குறித்த தீர்ப்பின் முழு வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email