SHARE

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

நீதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாவதம் இரு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்நிலையில் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தும் விமாக அரசாங்கம் கொண்டு வந்த 20 ஆம் திருத்த சட்ட மூலத்தின் 2 ஆம் வாசிப்பு திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்று நிறைவேற்றப்பட்டது.

Print Friendly, PDF & Email