SHARE

‘நமது ஈழநாடு’ வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் இம்மாதம் யாழ் மாவட்டத்ததை சேர்ந்த 10 முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளரான திரு கீத் குலசேகரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்தின் கீழ் போரால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள் இனம்காணப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான உதவிகள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.

அந்த அடிப்படையில் இந்த (ஒக்டோபர்) மாதம் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் சுயதொழிலை ஊக்குவிப்பதற்கெனவும் பாதிக்கப்பட்ட 10 முன்னாள் போராளி மற்றும் மாவீர்ர் குடும்பங்களுக்கு நமது ஈழநாடு குழுவினர் அடுத்த கட்ட உதவிகளை வழங்கிவைத்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கோப்பாய் , தாவடி, மற்றும் பாசையூரை சேர்ந்த அந்த 10 குடும்பங்களுக்கும் கோழிப்பண்ணை வைப்பதற்கான கோழிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

திரு கீத் குலசேகரம் அவர்களுடன் திரு விமுக்தி ஞனதுங்க மதர ஆராட்சிகே மற்றும் திரு சாந்தலோஜித்தன் புயலேந்திரன் ஆகியோரும் இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஊடகவியலாளரான சோபிகா அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த வாழ்வாதார உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Print Friendly, PDF & Email