SHARE
Processed with VSCO with lv01 preset

மாவீரர் நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவின் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் லேசர் கதிர் ஒளிக்கற்றைகள் மூலம் பிரமாண்டமான கார்த்திகை பூ ஒளிரவிடப்பட்டது.

கொரோனா நோய் தொற்று நெருக்கடியினால் இன்று பல கட்டுபாடுகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவு நாள் உலகமெங்குமுள்ள தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் உள்ள தமிழ் இளையோர் சிலரின் முயற்சியால் தமிழீழத்தின் தேசிய மலரான காந்தழ் பூ பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஒளிரவிடப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையிலிருந்து சுதந்திரத்திற்காகா போராடிய மாவீரர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம் என்ற வாசகங்களுடன் பிரமாண்டமாக ஒளிரவிடப்பட்ட கார்த்திகை மலரை பார்த்து எல்லோரும் மெய்சிலிர்த்து நின்றனர்.

யாரும் எதிர்பார்த்திராத குறித்த செயற்பாட்டை மேற்கொண்ட இளையோர் குழுவில் ஒரு வாரன சங்கர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“தாயகத்தில் இலங்கை அரசு மாவீரர்களின் நினைவுகூரலைத் தடுக்கவும் எங்கள் மக்கள் தியாகிகளை நினைவில் கொள்வதைத் தடுக்கவும் முயன்று வருகிறது. எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலையை பிரித்தானியாவிற்கும் உலகமெங்கிலுமுள்ள மக்களிற்கு காண்பிப்பதற்காகவும் இங்கிலாந்தின் கொள்கைகள் எங்கள் சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை முன்னிலைப்படுத்தவும் லண்டனில் உள்ள இந்த கட்டிடத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.” என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email