SHARE

கடந்து செல்லும் ஆண்டு அனைவருக்கும் ஒரு துன்பமிக்க ஆண்டாகவே கடந்து சென்று  உள்ளது. ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கொறோனா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் முடிவில்லாமல் கொறோணா தொற்று போய்க்கொண்டே உள்ளது. அதனைவிட இன்னும் வேறு வகை கொறோணா பரவுகிறது என்ற செய்தி பயமூட்டுவதாகவே உள்ளதாக யாழ். ஆயர் மேதகு கலாநிதி  யஸ்ரின்     பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  

எமது கிறிஸ்மஸ்   செய்தியில் தெரிவித்த கருத்தை திரும்;பவும் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம். இறைவன் உலக மக்கள் அனைவரையும் கொறோணா தொற்றில் இருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிராத்தியுங்கள். செபத்தால் மட்டுமே இந்த தொற்றுநோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறைவேண்டுதல் செய்யுங்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையும் அரசியற் கைதிகள் விடயமும் இன்னும் அரசால் தீர்க்கப்படாமலும் கவனிக்கப்படாமலும் உதாசிலனம் செய்யப்பட்டும் வருவது வேதனைக்;குரியது. அரசியற் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களும் இந்த விடயத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அரசை செயற்பட வலியுறுத்த வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

2021ஆம் புதிய ஆண்டு அனைவருக்கும் இறை ஆசீரையும் மன மகிழ்வையும்  பாதுகாப்பையும் தரும் ஆண்டாக அமையட்டும் என இறையாசீர் வேண்டுகிறோம் என யாழ்.ஆயர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email