SHARE
 – சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களின் முயற்சியில் தமிழில் வெளியானது

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து (Brexit) ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் குடியமர்வதற்கான வழிகாட்டி ஒன்றை பிரித்தானியாவில் உள்ள Goldsmith Chambers என்ற பிரபல வழக்குரைஞர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

31 ஜனவறி 2020 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது அனைவரும் அறிந்ததே. 
இந்த நிலையில் பிரித்தானியாவில் வாதியும் ஐரோப்பிய மற்றும் சுவிஸ் குடியுரிமையுள்ள மக்களும் அவரகளின் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து பிரித்தானியாவில் சட்ட ரீதியாக வசிப்பதற்கான திட்டத்தை உள்விவகார அமைச்சு அறிமுகம் செய்திருந்தது. இதுவே “ஐரோப்பிய குடியமர்வு திட்டம்” அதாவது European Union Settlement Scheme (EUSS) என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய குடியுரிமை உள்ள பல தமிழ் மக்கள் இது தொடர்பில் குழப்பமடைந்துள்ள நிலையில், இதனால் தமிழ் மக்களின் நலன் கருதி, சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களின் முயற்சியாலும் பங்களிப்பாலும் இதற்கான இலகுபடுத்தப்பட்ட வழிகாட்டி தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

Goldsmith Chambers இனுடைய குடிவரவு அணியின் சிரேஸ்ட வழக்குரைஞர்களான Sanaz Saifolahi, Samina Iqbal Sarah Pinder மற்றும் David Barr அவர்களுடன் இணைந்து கீத் குலசேகரம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மொழிமூல வழிகாட்டி பின்வருமாறு.

EUSS-Flyer-TAMIL-final-v2

Print Friendly, PDF & Email