SHARE

கேள்வி எழுப்புகிறது ITJP

இலங்கையில் ஆயுத விற்பனையில் களவாடப்பட்ட 6 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் பணத்திற்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்கள் இதுவரையிலும் இல்லை. மாறாக அச்சமற்ற அறிக்கைகள் மூலம் அது குறித்து கேள்விகளை எழுப்பிய பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவே கொல்லப்பட்டார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல்திட்டத்தின் (ITJP) பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கையால் கொள்வனவு செய்யப்பட்ட 4 மிக் விமானங்கங்களின் போது களவாடப்பட்ட 6,143,000 அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது என்ற கோள்வியுடன் ITJP யினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வியாபார உடன்படிக்கையின் போது அதனை அணுசரணை செய்த உக்ரைன் நாட்டிற்கான முன்னால் இலங்கைத்தூதுவர் உதயங்க வீரதுங்க பல வருடங்களாக நீதியிலிருந்து தப்பி தலைமறைவாகியிருந்தார் பின்னர் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களான ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததுமே நாடுதிரும்பியுள்ளார். அதேவேளை ஆச்சரியம் தரும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இணைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவருவதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக் வியாபார உடன்படிக்கை உக்ரேனுடைய விசாரணை இலங்கையின் விசாரணை உதயங்க வீரதுங்கவின் பணங்கள் என மிகத் தெளிவான ஆய்வுகளுடன் ITJP வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

Tamil-Translation-of-Press-Release-08-January-2021

Print Friendly, PDF & Email