SHARE

பொத்துவிலில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பித்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டிவரை’ எழுச்சிப் பேரணி இன்று (07) மாலை 6.30 மணியளவில் பொலிகண்டியை சென்றடைந்து தமிழர் தாகம் என்னவென்பதை எடுத்துரைத்துள்ளது.

தமிழர் பிரதேசத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டுவரும் தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த பேரணிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகள் என்பன பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கின.

அதேவேளை, இப்பேரணியை நடத்த விடாது பொலிஸாரால் நீதிமன்றங்களில் பெறப்பட்ட பல்வேறு தடைகளையும் உடைத்து எழுச்சிப் பேரணி நடந்தேறியுள்ளது.பொத்துவிலில் ஆரம்பித்த குறித்த பேரணியானது, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி யாழ்ப்பாணம், யாழ். பல்கலைக்கழகம், நல்லூர், கோப்பாய், ஆவரங்கால், ஊடாகச் சென்று பொலிகண்டியை சென்றடைந்தது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் பங்கேற்புடன் நடந்த இந்தப் பேரணியின் இறுதியில், குறித்த பேரணியின் நினைவாக ஒரு கல் நாட்டப்பட்டு நிறைவுசெய்யப்பட்டது.

Print Friendly, PDF & Email