SHARE

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளியீட்டை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளதுடன் பல முடிவுகளை எடுக்கவுள்ளனர்.

COVID-19 புதிய மாறுபாடுகள் ஐரோப்பிய நாடுகளில் தொற்றுநோய்களின் மூன்றாவது அலைகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளுக்கு இடையில் சரியான சமநிலையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதையும், ஒற்றைச் சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் சுமூகமான செயற்பாட்டிற்கு எல்லைகளைத் திறப்பது குறித்தும் ஒன்றியத் தலைவர்கள் கருத்தில் கொள்ளவுள்ளார்கள்.

GMT 14:00 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில், 27 நாடுகளின் தலைவர்களின் காணொளி தொடர்பாடல் மூலம் பங்கேற்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தங்களது கூட்டுத் தடுப்பூசிக் கொள்முதல் திட்டத்தில் தவறுகளை உணர்ந்துள்ளதுடன், தடுப்பூசித் திட்டங்களைத் தொடங்குவதற்கு இடையூறு விளைவிக்கும் விநியோகத் தடைகள் விரைவில் நீங்கும் என ஐரோப்பிய ஆணையகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email